"தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி" என்பதை நினைவுபடுத்தும் வகையில் அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது!
கோவை நீதி மன்றம் ஒன்றில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு துவங்கிய ஒரு வழக்கு பல்வேறு ஆண்டுகள் சென்னை உயர் நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களில் அறுபத்தி இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு கடைசியில் உச்ச நீதி மன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு முடிவடைந்தது.
1946-ஆம் ஆண்டு சக்கரை வியாபாரம் தொடர்பாக அம்மாசை கவுண்டர் என்பவரால் கிருஷ்ணசாமி முதலியார் என்பவருக்கேதிராக தொடரப்பட்ட ஒரு சிறு வழக்கே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வாகியுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் ஏற்படும் தாமதத்துக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts
Monday, 27 October 2008
Monday, 4 August 2008
இந்திய நாட்டின் நீதித் துறை!

சமீபத்தில் நீதித் துறை சம்பந்தமாக இந்திய அரசு வெளியிட்ட சில புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் (2007 டிசம்பர் 31) எடுக்கப்பட்ட புள்ளி விவர கணக்கின் படி, இந்தியாவின் 21 உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 43 ஆயிரத்து அறுபது ஆகும்! சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் உள்ள வழக்குகள் 4 லட்சத்து 28 ஆயிரத்து 832. அவற்றில் 3,92,824 சிவில் மற்றும் 36,008 கிரிமினல் வழக்குகள் ஆகும். அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 876 என்றாலும் உண்மையில் 594 நீதிபதிகள் மட்டுமே 2008 ஏப்ரல் 22 இன் கணக்கு படி பணியில் இருந்தவர்கள்! அதாவது, அன்றே 282 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. "தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதி" என்ற தத்துவத்தை இந்திய அரசு ஏற்கவில்லை போலும்!
Labels:
இந்திய,
சட்டம்,
நீதித் துறை,
வழக்குகள்
Subscribe to:
Posts (Atom)
